Posts

கதை அப்புறம். சம்பளம் தான் ஃபர்ஸ்டு. ஓவியாவின் பாலிசி

Image
பிக் பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் லைம்லைட்டுக்கு வந்துவிட்டார் ஓவியா . அவரை புக் பண்ண கோலிவுட் ஆட்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். நடிகை இனிமேல் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறது. இது எல்லாமே கொஞ்ச காலம் தான்.காற்று இருக்கும்போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று கதை கூட கேட்காமல் சம்பளத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறாராம். வருகிற தயாரிப்பாளர்களிடம் எல்லாம் அட்வான்ஸ்களாக வாங்கி குவிக்கிறாராம். ஒரு பக்கம் ஆர்மியில் இருக்கும் மேஜர்கள் நடிகை இப்படி நடிக்க கூடாது அப்படி நடிக்க கூடாது என்று வேண்டுகோள் வைத்துக்கொண்டிருக்க நடிகை அதுபற்றியெல்லாம் கவலையே படுவதில்லை

ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்

Image
சென்னை : 'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கியிருக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்தவருக்கு, 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலே சிறப்பான அங்கீகாரம். முதல் படமான 'மேயாத மான்' படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டார்.  ரசிகர்கள் சிலர் இவரை அடுத்த த்ரிஷா எனவும் சொல்லிவருகிறார்கள். தற்போது இவரது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்திருக்கிறது. நடிகர் கார்த்தியுடன் அடுத்ததாக ஜோடி சேர்கிறாராம் ப்ரியா 'பசங்க' படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்குகிறாராம். தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. அதன் பிறகு இவர் பாண்டிராஜ் படத்தில் இணையவிருக்கிறார். இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக 'ப்ரேமம் படத்தில் மேரியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறாராம். செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாகி இப்போது கதாநாயகியாகவும் முன்னேறியுள்ள ப்ரியா தமிழ் சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.